"ஹலோ தலைவரே, நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அரசியலில் குதிக்க ரெடியாயிட்டார்.''”

Advertisment

"ஆமாம்பா, கட்சியின் தொடக்க விழாவுக்கு முன்னோட்டமாக மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை தடபுடலாக நடத்தி, மீடியாக்களின் கவனத்தை விஜய் கவர்ந்திருக்கிறாரே!''”

vijay-uday

"உண்மைதாங்க தலைவரே, நடிகர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, அரசியல் கட்சியை தொடங்கும் மும்முரத்தில் இருக்கிறார். கட்சி தொடங்குவதற்கான சரியான நேரம் இதுதான் என்று அவர் கருதுகிறாராம். இதற்கு பைலட் விழாவாகத்தான், 10 ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில், தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஏறத்தாழ 1500 மாணவ, மாணவிகளை குடும்பத்தோடு சென் னைக்கு அழைத்து, பல மணி நேரம் அவர்களோடு செலவிட்டு, அவர்களுக்கு தனது மக்கள் மன்றத்தின் மூலம் உதவித் தொகைகளை வாரி வழங்கி உற்சாகப்படுத்தி இருக்கிறார். ஏறத்தாழ 12 மணி நேரத்துக்கும் மேலாக, கொஞ்சம் கூட உட்காராமலும், இடையில் உணவு உண்ணாமலும் இந்த நிகழ்ச்சியில் அவர் காட்டிய ஆர்வம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.''”

Advertisment

"தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கணும்னு விஜய், ’டிசிப்ளின் அட்வைஸ்’ எல்லாம் பண்ணி இருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அந்த பரிசளிப்பு விழாவில் அவர் சர்ச் சைக்குரிய அரசியல் கருத்துக்களை வைக்க வேண்டும் என்பது, அவர் தரப்பின் விருப்பமாக இருந் திருக்கிறது. அதனால், அவருக்கு ஆலோ சனை சொன்ன நண்பர்கள் சிலர், அமைச்சர் உதய நிதியை விமர்சித்துப் பேசினால், பரபரப்பை ஏற்படுத்தலாம்னு விஜய்க்கு ஆலோ சனை சொல்லி இருக்காங்க. ஆனால், விஜய்யோ, உதய் என்னிடம் நல்ல வகையில் நட்பு பாராட்டி வருகிறார். நெருக் கடி நேரத்திலும் அவர் எனக்கு ஆறுதலாக இருந் திருக்கிறார். அதனால் அவரை டார்கெட் செய்து பேச நான் விரும்பவில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாராம். ஆனாலும் அந்த விழாவில் அம்பேத்கார், பெரியார், காமராசர் என்று அவர் உச்சரித்த தலைவர்களின் பெயர்கள் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுக்க வந்திருந்த தனது மக்கள் மன்றத்தினரிடம்,அரசியல் நிலவரம் குறித்தும் விஜய் வெகுநேரம் ஆலோசித்த தாகவும் சொல்கிறார்கள்.''”

"தன்னோட மகனைக் கொன்ற கொலை யாளிகளைக் கண்டுபிடிங்கன்னு முதல்வருக்கு கோரிக்கை வந்தி ருக்காமே?''

Advertisment

rr"ஆமா தலை வரே. சமூகப் போராளியும் சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞருமான சங்கரசுப்பு மகன் சதீஷ் குமார், கடந்த 2011ஆம் ஆண்டில் ஏரியில் சடலமாக மீட்கப்பட் டார். அந்த கொலை வழக்கு விசாரணையில் நிறைய குளறுபடிகள் இருந்ததால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.ஐ.யோ, தற் கொலையா இருக்கலாம்னு முடிவுக்கு வந்துச்சு. எனவே சி.பி.ஐ. சரியாக விசாரிக்கலைன்னு சங்கரசுப்பு புகாரளித்ததால் அந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில், சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டது உறுதி யாச்சு. ஆனாலும் திருமங்கலம் போலீசாரின் குளறுபடியால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியலைன்னுட்டாங்க. அதுக் கப்புறமா அந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி.க்கு கைமாறி, கிடப்பி லேயே இருந்திருக்கு. கடைசியா, கடந்த 7.3.2022ஆம் தேதி. வழக்கின் ஸ்டேட்டஸ் என்னன்னு தாக்கல் பண்ணச்சொல்லி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுச்சு. அதுக்கப்புறமா எந்த முன்னேற்றமும் இல்லாததால, தன் மகனின் கொலைக்கு காரணமான, திருமங்கலம் காவல் நிலையத்தில் 2011-ல் பணிபுரிந்த ஆய்வாளர் சுரேஷ்பாபு, அவருக்கு உடந்தையான போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து உண்மையை கண்டறியணும்னு தமிழ்நாடு முதல்வரை கேட்டிருக்காரு வழக்கறிஞர் சங்கரசுப்பு. தந்தையின் தவிப்புக்கு விடை கிடைச்சாகணும்.''

"மனித உரிமை ஆணையர் கண்ணதாசன், அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்ததுக்கு அ.தி.மு.க. இன்பதுரை எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே?''

"விசாரணை கைதியாகவோ, கைதியாகவோ இருப்பவருக்கு எதிராக மனித உரிமை மீறப்பட்டதாக புகார் எழுந்தால், அதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்கலாம்னு. பட்ங் டழ்ர்ற்ங்ஸ்ரீற்ண்ர்ய் ர்ச் ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள் ஆஸ்ரீற் 1993 ல் தெரிவிச்சிருக்காம். அதேபோல், அந்த ஆணையத்தின் 3 உறுப்பினர்களில் இருவர் நீதிபதிகளாக இருப்பவர்களும், ஒருவர் மனித உரிமை ஆர்வலராக வும் மட்டும் இருந்தால் போதுமாம். அந்த அடிப்படையில்தான், மனித உரிமை வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் கண்ணதாசனும் இதில் உறுப்பினராக இருக்காராம். மேலும், செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் முரட்டுத்தனமா நடத்தியதால்தான் அவருக்கு தலையில் காயம்பட்டதாகவும், அமலாக்கத்துறை உயர் அதிகாரி, செந்தில் பாலாஜியை "ரெய்டுக்கு வந்தா ஆள வச்சு அடிப்பீங்களோ? கார் கண்ணாடியை உடைப்பீங்களோ? அதிகாரிகளைத் தாக்குவீங்களோ?ன்னு கேட்டு மிரட்டல் தொனியில் விசாரிச்சதாக தன்னை சந்திக்க வந்தவர்களிடம் செந்தில் பாலாஜியை கூறியிருக்காராம்.''

" ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை மீது ஏக கடுப்பில் இருக்கிறாராமே?''”

annamalai

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கும் இடையில் உரசல் ரொம்பநாளாகவே இருந்து வருகிறது. எல்.முருகன் கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் அண்ணாமலை. இந்த விவகாரம் அமித்ஷாவின் தமிழக விசிட்டின் போதுதான் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையின் கவனத்துக்கே சென்றதாம். எப்படி என்றால், அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்ட-லேயே கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்ததாக அவர் வேலூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் கலந்துக்கிட்டார். அன்று சென்னையில் இருந்தும் கூட அமித்ஷாவின் இந்த இரண்டு நிகழ்ச்சியிலும் எல்.முருகன் தலையைக் காட்டவில்லை. இதையறிந்த அமித்ஷா, எல்.முருகனை அழைத்து, நான் தமிழ்நாட்டுக்கு வந்தப்ப கூட, என்னை நீங்கள் வந்து பார்க்கலையேன்னு கேட்டிருக்கார். அப்போதுதான், அமித்ஷாவைத் தான் சந்திக்க முடியாதபடி அண்ணாமலை தடுத்த விவகாரத்தை எல்லாம் அவ ரிடம் ஒப்பித்திருக்கிறார் முருகன்.''”

"அவ்வளவு நொந்துபோயிருக் கிறாரா முருகன்?''”

"அதுமட்டுமில்லைங்க தலைவரே, அமித்ஷாவிடம் தன் வேதனை முழுதை யும் கொட்டிய முருகன், "சென்னை யிலிருந்து வேலூருக்கு உங்களுடன் நானும் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அண்ணாமலை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கடைசி நேரத்தில் என்னைத் தடுத்து நிறுத்திவிட்டு, எனக்கு பதிலாக சுதாகர் ரெட்டியை உங்களுடன் அந்த ஹெலிகாப்டரில் பயணிக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார். அதனால்தான் என்னால் வேலூர் நிகழ்ச்சிக்கும் வரமுடியாமல் போய்விட்டது' என்று சொல்லி இருக்கிறார். இதைக்கேட்ட அமித்ஷா, "அண்ணா மலையின் மீதான புகார்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.நீங்கள் கவலைப்பட வேண்டாம். எப்போதும் போல், உற்சாகம் இழக்காமல் செயல்படுங்கள். அண்ணாமலையை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று சொல்லி, முருகனுக்கு ஆறுதலூட்டினாராம். இந்த விவகாரம், மோடி, நட்டா உள்ளிட்ட தலைவர்களின் காதுவரை போயிருக்கிறது.''”

"இந்த சூழலில், பா.ஜ.க. அண்ணாமலை, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டம் வகுத்திருக்கிறாரே?''”

lmurugan

"அடுத்த வருடம் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இப்பவே பிரச்சாரத்தை அண்ணா மலை கையில் எடுக்க இருக்கிறாராம். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளு மன்றத் தொகுதிக்கும் செல்லும் வகையில், ’என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில், இம்மாத இறுதியில் அவர் தேர்தல் பரப்புரைப் பயணத்தை ஆரம்பிக்க போகிறாராம். இதன் மூலம் மக்களைக் கவர முடி கிறதோ இல்லையோ, தன் மீது பல வகையிலும் கோபமாக இருக்கும், கட்சியின் தேசியத் தலைமையை சமாதானப்படுத்தி விடலாம் என்பது அவரது கணக்காம். இதை சாக்காக்கி, தமிழகம் முழுதும் இருக்கும் பெரிய பெரிய தொழிலதி பர்கள், காண்ட்ராக்டர்கள் எனப் பலரிடமும் பெரிய அளவில் வசூலும் நடந்து வருகிறது. இந்த வசூலை அண்ணாமலையின் அடிப் பொடிகள், அரட்டி மிரட்டி நடத்திவருவதால், இது குறித்த புகார்கள் காவல்துறையிடம் குவிகிறதாம். எனவே, அவர் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கும் நேரத்தில் இந்தப் புகார்களை வைத்து,அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, காவல்துறையும் தயாராகி வருகிறதாம்.''”

"சமீப நாட்களா, பா.ஜ.க. தரப்புக்கு தி.மு.க. தொடர்ச்சியா பதிலடி கொடுத்துத் திணற வைக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கொஞ்ச நாளா, பா.ஜ.க. தரப்பு தனது வார் ரூம் விசுவாசிகள் மூலம், தி.மு.க.வுக்கு எதிராக அவதூறுப் பிரசாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் தி.மு.க.வோ இதை உரிய வகையில் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. உதாரணத்திற்கு, பா.ஜ.க, பிரமுகரான அமர்பிரசாத்ரெட்டி, புதுவையில் இருக்கும் ஒரு பள்ளி விவகாரத்தை பெரிதாக்கி, அந்த டுவிட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலின் பெயரை டேக் செய்திருந்தார். இதை கவனித்த போலீஸ் டீம், இந்த விவகாரத்தில் அவரைக் கைது செய்து, ஷாக் கொடுக்கத் திட்டமிட்டது. இதற்காக அவரது அடையாறு வீட்டையும் முற்றுகையிட்டது. இதையறிந்த அமர்பிரசாத், அந்த டுவிட்டர் பதிவை அவசர அவசரமாக டெ-ட் செய்து விட்டு, பெங்களூர்ப் பக்கம் எஸ்கேப் ஆகிவிட்டார். எனினும், இதேபோல் மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் குறித்து அவதூறு டுவிட் பதிவிட்ட விவகாரத்தில்,. பா.ஜ.க.வின் மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ்.ஜி.சூர்யாவை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது போலீஸ். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் வரை கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு பா.ஜ.க.வுக்கு இதன்மூலம் ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தி.மு.க. இன்னும் சில பா.ஜ.க. பிரமுகர்கள், தமிழக போலீஸின் கைதுப் பட்டியலில் இருக்கிறார்களாம்.''”

"தமிழக பா.ஜ.க.வினருக்கு இது போதாத காலம் போலிருக்கு. சரிப்பா, தேசிய அளவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு அணி இப்ப உருவாகுதே?''”

"நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியைக் கையில் எடுத் திருக்கிறார் பீஹார் முதல்வரான நிதிஷ்குமார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வருகிற 23 ஆம் தேதி பீஹாரில் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் அனை வரும் எதிர்பார்ப்பது மு.க.ஸ்டாலினைத் தான். அவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மகிழ்வோடு இசைவளித்திருக்கிறார். இந்த முயற்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை, பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் மத்தியில் உருவாகி இருக்கிறது. இதற்கு முன் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் ஆகியோர் தனித்தனியாக எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.. இப்போதைய நிதிஷின் முயற்சி வேகமெடுப்பதால், மோடியும் அமித்ஷாவும் மிரட்சியில் இருக்கிறார்களாம்.''”,

rr

"முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸுக்கு மூன் றாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறதே?''

"ஆமாங்க தலைவரே, கடந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செல்வாக்கோடு இருந்தவர்தான் இந்த ராஜேஷ் தாஸ். அப்போது அவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக, ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியே அவர் மீது புகார் கொடுத்து அனைவரையும் திடுக்கிட வைத்தார். எடப்பாடியின் கருணையால் ராஜேஷ்தாஸ் மீது அப்போது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ராஜேஷ்தாஸ் போன்ற அதி காரிகள் அருகில் இருந்தால், பணப்பட்டுவாடா உட்பட சகல அத்துமீறல்களையும் செய்து, எளிதாகக் கரையேறிவிடலாம் என்று நம்பி இருந்தார் எடப்பாடி. அப்படி இருந்தும் அ.தி.மு.க. தோல்வியையே தேர்தலில் சந்தித்தது. இந்த நிலையில்தான், இப்போது அந்த பா-யல் அத்துமீறல் வழக்கில் ராஜேஷ்தாசுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கி இருக்கிறது விழுப்புரம் நீதிமன்றம். இது ராஜேஷ்தாசை மட்டுமல்லாது எடப்பாடி தரப்பையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.''”

"கலெக்டரை கீழே பிடித்துத் தள்ளியதாக எம்.பி. ஒருவரின் ஆதரவாளர் கைதாகி இருக் கிறாரே?''

rr

"ஆமாங்க தலைவரே, அண்மையில், ராமநாதபுரத்தில் விளையாட்டு வீரர்களுக்குப் பரிசளிக்கும் விழா நடந்தது. அன்று மதியம் 3 மணியளவில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு 20 நிமிடங்கள் முன்னதாகவே பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சரான கண்ணப்பன் வர, அவரைப் பார்த்ததும் விழாவைத் தொடங்கிவிட்டார்கள். அப்போது அங்கே வந்த மற்றொரு விருந்தினரான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ்கனி, தான் வருவதற்கு முன்பே விழா தொடங்கப்பட்டதை அறிந்து டென்ஷனானார். உடனே இது குறித்து அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் அவர் கேள்வி எழுப்பினார். இதைப் பார்த்த அமைச்சர் கண்ணப்பன், "அங்க என்ன பிரச்சனை.? மேலே வாய்யா பேசிக்கலாம்'’என்று சொல்ல, இதைக்கேட்டு மேலும் டென்ஷனான எம்.பி.’"நான் உங்க வீட்ல மாடா மேய்ச்சேன்.? வாய்யா.. போய்யாங்கிறீங்க?'’என்று அமைச்சரிடமும் எகிறினார். உடனே கலெக்டர், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது எம்.பி.யின் ஆதரவாளரான வடக்கு மூக்கையூர் விஜயராமன், கலெக்டரின் நெஞ்சில் கையை வைத்து ’"நீ நகருய்யா' என்று தள்ள, இதை எதிர்பார்க்காத காலெக்டர் பேலன்ஸ் தவறி, கீழே படீரென்று சாய, அவரை அருகில் இருந்த அதிகாரிகள் தூக்கிவிட்டனர். இந்த விவகாரம் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியதால், போலீஸ் அந்த விஜயராமனை கைது செய்திருக்கிறது.''”

"ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரைப் பற்றிய சலசலப்பும் எழுந்திருக்கே?''”

rr

"பல்வேறு துறைகளில் பணியாற்றி, அங்கெல்லாம் புகாருக்கு ஆளான டி.எஸ்.ஜவஹர் ஐ.ஏ.எஸ், தற்போது தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின், திட்ட அதிகாரியாக உட்காரவைக்கப்பட்டு இருக்கிறார். தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகளை அடிமை போல் நடத்துவதன் மூலம், அனைவரின் எரிச்சலையும் சம்பாதித்தவர் இவர். தலைமைச் செயலாளர் இறையன்பு இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருப்பதால், அவரது நாற்காலியைக் குறிவைத்து, பல சீனியர் அதிகாரிகளுக்கு நடுவே இவரும் விறுவிறுப்பாகக் காய்களை நகர்த்தி வருகிறாராம். இவரது கல்லூரித் தோழர் ஒருவர் டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் செயலாளர் அந்தஸ்தில் இருப்பதால், அவர் மூலமும் தமிழக அரசுக்கு ஜவஹர் அழுத்தம் கொடுத்து வருகிறாராம். இதைக் கவனித்த பல அலு வலர்கள், இவர் தலை மைச் செயலாளர் பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்று இப்போதே வரிந்து கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.''”

"நானும் எனக்குக் கிடைத்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சேர்மன் பதவி கடந்த பல மாதங்களாக நிரப்பப் படாமல் , இன்சார்ஜ் என்ற அளவிலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்தப் பணியில் தன்னை அமரவைக்க வேண்டும் என்று இப்போதே லாபி செய்துவருகிறாராம்.இதையறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பு, மாநில தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஷகீல் அக்தரை நியமித்திருக்கும் நிலையில், தேர்வாணையத்தின் சேர்மன் பதவியிலும் ஒரு ஓய்வு பெறும் ஐ.பி.எஸ். அதிகாரி யைத்தான் நியமிக்க வேண்டுமா?’ என தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கிவிட் டார்கள்.''